நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திற்கு துணை முதலமைச்சர் வாழ்த்து!

நாளை வெளியாகவுள்ள ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்திற்கு தனது x தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் துணை முதலமைச்சர்.

 

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தைப் பார்த்ததாகவும், அப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் vஉதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Entertainer-ஆக ‘Coolie’ திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

‘கூலி’ திரைப்படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த”கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ், சத்தியராஜ், இயக்குநர் லோகேஷ், ஆமிர்கான், இசையமைப்பாளர் அனிருத், ஸ்ருதி ஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தி, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் ‘கூலி’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.