புதுடெல்லியில் நடக்கவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசை கண்டித்து திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் பெரியார் திடல் நுழைவாயிலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்சத்தில் 50 பேர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் முழக்கத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கீ.வீரமணி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் மரியாதை வழங்கப்படுகிறது.வேலு நாச்சியார், வ.வு.சிதம்பரனர் உள்ளிட்டோருக்கு மரியாதை வழங்கப்படவில்லை என்பது கண்டிக்கதக்கது என்றார் அவர்.
தமிழக அரசு சார்பில் மரியாதை வழங்க கோரி கேட்டும் உரிய முறைமுறையில் வழங்கப்படாமல் அலட்சிபடுத்தியுள்ளது மத்திய அரசு.பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த செயலை கண்டித்து மத்திய அர்சை கண்டித்து போராட்டம் நடைபெற்றது என கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.








