#BoxOffice-ல் சாதனை படைக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ – வசூல் எவ்வளவு தெரியுமா?

அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இத்திரைப்படம்…

அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக உள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால் இப்படம் வெளியான 2வது வாரத்தில் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டது. முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் தற்போது 350க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகின்றன. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதன் மூன்றாம் பாகம், நான்காம் பாகம்கூட எடுக்கலாம் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் வெளியானாலும் தமிழ்நாடு முழுக்க டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் இன்னும் பல ஸ்கிரீன்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், இத்திரைப்படம் உலகளவில் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்த பதிவு ஒன்றை படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை இப்படத்தின் கதாநாயகன் அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.