முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

புதுவை ஜிப்மரில் இந்தி திணிப்பைக் கண்டித்து வரும் 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் மீது இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜிப்மர் இயக்குனர் ஒரு சுற்று அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். அதில், ஜிப்மர் அலுவலகக் கோப்புகள் அனைத்தையும், எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்து இருக்கின்றார்.

மருத்துவம் கற்பிப்பதற்குப் பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளிக்கூடமாக்க முயற்சிக்கின்றார். எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் இந்தியை விரட்டியடித்து தமிழைக் காக்க வேண்டியது தமிழரின் கடமை ஆகும்.

அந்தச் சுற்று அறிக்கையை அவர் உடனே திரும்பப் பெற வேண்டும். அந்த இயக்குனரை இந்தி பேசும் மாநிலத்திற்குப் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற மே 10ம் தேதி காலை 10 மணியளவில், புதுவை ஜிப்மர் நுழைவாயில் முன்பு மதிமுக சார்பில், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே. மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்புடன் தொடர்பு; கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

Jayasheeba

மகளிர் தினம்: முதலமைச்சர் வாழ்த்து

Halley Karthik

சகோதரி செல்வதைத் தடுக்க இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சகோதரன்

Web Editor