அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் கட்சி!

அதிமுகவுக்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப் போவதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் தெரிவித்தார்.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல்…

அதிமுகவுக்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப் போவதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் தெரிவித்தார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  கூட்டணி பேச்சுவார்த்தை,  தொகுதி பங்கீடு,  வேட்பாளர் அறிவிப்பு,  நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.   தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்தநிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான்,  அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன்,  பொருளாளர் சபீர் அகமது ஆகியோர் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி,  பெஞ்சமின்,  திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினர்.

இந்த பேச்சுவார்த்தை கிட்டதட்ட 20 நிமிடங்கள் நடைபெற்றதாக தெரிகிறது.   இதனைத் தொடர்ந்து,  அதிமுகவுக்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வதாக  இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.