முக்கியச் செய்திகள் இந்தியா

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 4 பேர் சுட்டுக் கொலை

டெல்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள கீழமை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது வழக்கறிஞர்கள் உடையில் வந்திருந்த இரண்டு பேர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதில் ஜிதேந்தர் கோகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர். கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?

Vandhana

மோசடி வழக்கு: பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை

Halley karthi

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பயங்கர தீ விபத்து!

Ezhilarasan