முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

தரமான சம்பவத்தை நிகழ்த்தி விட்டு விடைபெற காத்திருக்கும் தென் மேற்கு பருவமழை..!


நெப்போலியன்

கட்டுரையாளர்

பருவமழை என்ற உடனே இங்கு பலருக்கு எல்லாம் பொய்த்து விட்டது என்கிற எதிர்மறை எண்ணம் உண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. விறுவிறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கும் இங்கு பலரில் பருவமழை என்றால் என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள் தான் என்ன என்று தெரியுமா?  இதோ இந்த கட்டூரை உங்களுக்கு ஒரளவு புரிதலை தரும்

அடர்ந்த காடுகள், மலைகள், சம வெளிப்பகுதிகள், பாலை வனங்கள் என மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ள தீபகற்ப இந்தியாவை எப்போதும் வளம் கொழிக்கும் நாடாகாவே இருக்க உதவுவது என்ன தெரியுமா? அது தான் தென் மேற்கு பருவமழை.

எங்கே துவங்கிறது இந்த தென் மேற்கு பருவமழை

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவக்காற்று துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் முதலில் அந்தமானில் தான் ஏற்படுகிறது ( அதாவது கடல் கற்பம் அடைகிறது என்றும் சொல்லலாம் )

தெற்கு அந்தாமானில் பருவக்காற்று துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டதன் பின்னர் கேரளாவில் பருவமழை துவங்குகிறது. பின்னர் படிப்படியாக இந்தியாவில் கீழ் இருந்து மேலாக கர்நாடகா, என் நேரமும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைகள், ஒடிசா, மத்திய பிரதேசம், வடகிடக்கு மாநிலங்களான அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இப்படி படிப்படியாக நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்று அடைகிறது தென்மேற்கு பருவமழை.

கேரளாவில் துவங்கி ராஜாஸ்தான் வரை மழை சென்று விட்டால், நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று சென்று அடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும். இதே போல் தென் மேற்கு பருவமழை மேற்கு ராஜாஸ்தானில் இருந்து மேல் இருந்து கீழாக படிப்படியாக விலகி கேரளாவிற்கு வந்து நிறைவு பெறும். தென் மேற்கு பருவமழை காலகட்டத்தில் அரபிக்கடல், இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா என எங்கு காற்றழுத்த தாழ்வு பகுதிகள், புயல் சின்னங்கள் உருவானாலும் அது பருவமழையை மேலும் வலுவடைய செய்து ஒரு சில இடங்களில் பெய்து வரும் கனமழையை பரவலாக எல்லா இடங்களிலும் ஏற்பட வழிவகை செய்யும். இது போன்ற நேரங்களில் தான் மலை சார்ந்த பகுதிகளில் மேக வெடிப்பு ( cloud burst ) ஏற்பட்டு கடுமையான வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படுகிறது.

சரி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எந்தளவிற்கு இருந்தது என்பதை பார்ப்போம் :

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும் தெற்கு தீபகற்ப இந்தியாவில் இந்த ஆண்டு இயல்பைவிட தென்மேற்கு பருவமழை 9 சதவீதம் அதிகமாக மழைப்பொழிவு ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா உள்ளிட்ட இடங்களில் இந்த ஆண்டு இயல்பை விட மிக அதிகமான மழையை தென்மேற்கு பருவமழை ஏற்படுத்தி உள்ளது.

“மாரியல்லது காரியமில்லை” – அதாவது மழை இல்லை என்றால் விவாசாயம் இல்லை. விவசாயம் இல்லை என்றால் இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இல்லை. கடல் சார்ந்த வணிகம், ஏற்றுமதி, உற்பத்தி இப்படி எல்லா தொழில்களை விட விவசாயத்தால் கிடைக்கும் வளமே இந்தியாவை பொறுத்த வரை பெரியதாக உள்ளது.  பருவமழை பொய்க்கும் பட்சத்தில் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கும் என்றால் அதில் ஐய்யம்மில்லை.

தென் மேற்கு பருவமழையும் – தமிழகமும் :

சேர நாட்டில் பெய்ய – சோழ நாட்டில் நெல் விளையும் என்பது பழமொழி

ஆம் தமிழகம் மலை மறை பிரதேசமாக இருந்தாலும், தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழகத்திற்கு பெரும் அளவில் மழை இல்லை என்ற போதிலும் தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பூர்த்திசெய்யும் காவிரி, வைகை, தாமிரபரணி, மணிமுத்தாறு, பவானி போன்ற எண்ணற்ற நதிகளின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சி மலையில் தான் உள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் கேரளா மற்றும் கர்நாடகாவில் சரியாக இல்லை என்றால் அதன் பாதிப்பு முழுக்க முழுக்க தமிழகத்திற்கு இருக்கும் என்பதே உண்மை. தமிழகத்தைப் பொருத்தவரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமே தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் அதிகபடியான மழைப் பொழிவை பெருகிறது. இந்த மலை பகுதிகள் தான் தமிழகத்தில் ஓடும் நதிகளின் நுழைவு வாயிலாகவும் உள்ளது.

சரி தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழகத்திற்கு கிடைக்கும் மழை எப்படி கிடைக்கிறது? வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு போன்ற வானிலை மாற்றங்களால் மட்டுமே தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் அதிகமாக மழை கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழையால் மட்டுமே பிராதான மழை பொழிவு கிடைக்கிறது.

 

கட்டுரையாளர்: நெப்போலியன்

Advertisement:
SHARE

Related posts

ட்விட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Niruban Chakkaaravarthi

இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

Ezhilarasan

தாய், தந்தையின் ஆதரவின்றி பசியால் வாடும் 6 வயது சிறுவன்; மனதை உருக வைக்கும் நிகழ்வு!

Jayapriya