நாட்டையே உலுக்கிய சம்பவம் | #Delhi-ல் ரூ.2000 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்!

டெல்லியில் ரூ.2000 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக கடத்த பலரும் விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவிர்க்க அரசு தீவிர…

டெல்லியில் ரூ.2000 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக கடத்த பலரும் விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. இதன் காரணமாக விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த 29ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவரிடமிருந்து ரூ.24.9 கோடி மதிப்பிலான சுமார் 1.6 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, டெல்லி முழுவதும் போதைப்பொருள் தொடர்பான சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையின் போது இன்று (அக். 2) சுமார் 500 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2000 கோடி மதிப்பில் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.