‘எந்த சாரே’ விநாயகனுடன் நேருக்கு நேர் மோதும் #Mammootty… தொடங்கியது படப்பிடிப்பு!

‘மம்முட்டி கம்பெனி’ தயாரிப்பில் உருவாகும் 7-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் மம்மூட்டி. ‘மம்மூட்டி கம்பெனி’ தயாரிப்பில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களம் கொண்டவையே. ரோர்சா,…

‘மம்முட்டி கம்பெனி’ தயாரிப்பில் உருவாகும் 7-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் மம்மூட்டி. ‘மம்மூட்டி கம்பெனி’ தயாரிப்பில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களம் கொண்டவையே. ரோர்சா, காதல் தி கோர், கன்னூர் ஸ்குவாட், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். பிரம்மயுகம் படமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் நடிகர் மம்முட்டி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் 7வது படத்தை தயாரிக்கிறார். அப்படத்தில் அவரே நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜோஸ் இயக்குகிறார். இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் விநாயகன் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் ப்ருத்விராஜ், ஜோஜு ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலக, விநாயகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதில் ட்விஸ்ட் என்னவென்றால், இப்படத்தில் விநாயகத்துக்கு வில்லனாக மம்முட்டி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் தொடங்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.