#Delhi | அமைச்சர் பதவியிலிருந்து கைலாஷ் கெலாட் ராஜினாமா – ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல்!

டெல்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார். டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின்…

#Delhi | Kailash Gehlot resigns from the post of minister - also leaves Aam Aadmi Party!

டெல்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார்.

டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக அதிஷி இருந்து வருகிறார். அதேபோல் அம்மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் கெலாட் இருந்து வந்தார்.

இந்நிலையில், இவர் இன்று (நவ.,17) டெல்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக கூறி கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி முதலமைச்சரும், கல்வித்துறை அமைச்சருமான அதிஷி ஆகியோருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, “டெல்லி மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை கட்சியால் நிறைவேற்ற முடியாதது அதிருப்தி அளிக்கிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணமாக பதவி விலகுகிறேன்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யமுனை நதியை சுத்தப்படுத்த தவறிவிட்டோம். மக்களுக்கு ஒரு தூய்மையான யமுனை நதியை உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தோம். ஆனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற தவறிவிட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.