83 படத்திற்கு வரி விலக்கு அளித்த டெல்லி அரசு

கபில்தேவ் நடிப்பில் உருவாகியுள்ள 83 படத்திற்கு வரி விலக்கு அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.  1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை,…

கபில்தேவ் நடிப்பில் உருவாகியுள்ள 83 படத்திற்கு வரி விலக்கு அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இறுதிப் போட்டியில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தது. கபில்தேவ் தலைமையிலான அப்போதைய இந்திய அணியில் ,  ஸ்ரீகாந்த், மொகிந்தர் அமர்நாத், யஷ்பால் சர்மா, மான் சிங், சந்தீப் படேல், கீர்த்தி ஆசாத், மதன்லால் உட்பட பங்கேற்றனர். அந்த சாதனை வெற்றியை மையமாக வைத்து, ‘83’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தி இயக்குநர் கபீர்கான் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். கபில்தேவாக ரன்வீர் சிங், ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி, கவாஸ்கராக தஹிர் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். கபில்தேவ் மனைவியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற நிகழ்வையும், கபில்தேவ் வாழ்க்கையையும் அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் முடிந்து எப்போதோ ரெடியாகிவிட்டாலும் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது டிசம்பர் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.  இதில், ரன்வீர் சிங், ஜீவா ஆகியோர் மிரட்டியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இந்த படத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.