டெல்லியில் நடைபாதை பாலத்திற்குள் புகுந்த ஆட்டோ: திடீரென அதிர்ச்சியான பொதுமக்கள்!

டெல்லி போக்குவரத்து நெரில் மிகுந்த சாலை பாலத்தில் ஆட்டோ ஒன்று சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. x தளத்தில் ராம்ராஜ் என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி…

டெல்லி போக்குவரத்து நெரில் மிகுந்த சாலை பாலத்தில் ஆட்டோ ஒன்று சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

x தளத்தில் ராம்ராஜ் என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி ஹம்டார்ட் பகுதி காட்டப்படுகிறது. அப்போது அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. திடீரென ஆட்டோ ஒன்று பாலத்தின் மீது ஏறி செல்கிறது.

இதனால் பாதசாரிகள் அதிர்ச்சி அடைந்து ஆட்டோவுக்கு வழிவிடுகின்றனர். ஆட்டோவுக்கு பின்னால் ஓடி வரும் ஒருவர் பின்னர் ஆட்டோவில் ஏறி செல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இது போன்ற ஓட்நர்களால் தான் விபத்து நேரிடுவதாகவும், ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சப்ஸ்கிரைபர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆட்டோவை பறிமுதல் செய்து அவரை கைது செய்ய வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.