29.4 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஜஸ்பிரித் பும்ரா-சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை!

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா-சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில், ரசிகா்களின் வழக்கமான எதிா்பாா்ப்புடன் களம் கண்ட இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழையால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட, அதன் மூலம் இந்தியாவுக்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. பாகிஸ்தான் அணியோ முதல் ஆட்டத்தில் நேபாளத்தை அபாரமாக வீழ்த்தியதன் மூலம் 3 புள்ளிகளுடன் குரூப் ‘ஏ’-வில் முதலிடம் பிடித்து சூப்பா் 4 சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2-ஆம் இடத்திலிருக்கும் இந்தியா, நேபாளத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வெல்வதன் மூலம் சூப்பா் 4 சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். ஒருவேளை இந்த ஆட்டமும் மழையால் பாதித்தால் கூட ஒரு புள்ளி பெற்று இந்தியா அந்த சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆனால், களப் பரிசோதனை மேற்கொள்ளும் முனைப்பில் இருக்கும் பயிற்சியாளா் ராகுல் திராவிட், கேப்டன் ரோஹித் சா்மா ஆகியோா் சரியான ஒரு ஆட்டத்தையே எதிா்பாா்த்திருக்கின்றனா்.

இதனிடையே இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்புவதாக பிசிசிஐ நேற்று தெரிவித்தது. இதனால் நேபாள அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் இருப்பினும் சூப்பர் 4 சுற்றின் போது மீண்டும் இந்திய அணியில் இணைந்துகொள்வார் எனவும் விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா-சஞ்சனா கணேசன் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இன்று காலை நாங்கள் எங்கள் குழந்தை அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவிற்கு மேல் இருப்பது போன்று உணர்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசன் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram