முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை காரனோடையில் விபத்து; கணவன் கண்முன்னே மனைவி பலி

சென்னை அடுத்த காரனோடை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காரனோடை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் வயது 45. இவரது மனைவி பரிமளா வயது 40. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு மூலக்கடை வழியாக அம்பேத்கர் கல்லூரி சாலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது எருக்கஞ்சேரி ஐயப்பா திரையரங்கம் எதிரே சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பக்கவாட்டில் வந்த மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் இருவரும் நிலை குலைந்து தடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது பிரமிளாவின் மீது லாரியின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது கணவர் பிரேம்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேம்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரமிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் குப்பை லாரியை அடித்து உடைத்தனர். மேலும் அந்த லாரியை ஓட்டி வந்த ஒப்பந்த ஊழியரான உத்தரபிரதேச மாநிலம் பகுதியைச் சேர்ந்த மங்கள் என்பவரையும் அடித்து உதைத்தனர். போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

பொல்லார்ட் காயம் : பாக். தொடரில் இருந்து விலகல்

Halley Karthik

இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா

Halley Karthik

பிரதமர் தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம்

Halley Karthik