முக்கியச் செய்திகள் விளையாட்டு

மொராக்கோவுக்கு எதிரான போட்டியில் தோல்வி; பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறை

உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை, மொராக்கோ வீழ்த்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் குரூப் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் அணியும், மொராக்கோ அணியும் மோதின. தொடக்கம் முதலே பெல்ஜியம் அணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மொராக்கோ அணி ஆடியது. அதன் பலனாக முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க இயலவில்லை. எனினும் மொரோக்கோ அணி, இரண்டு கோல்கள் அடித்து பெல்ஜியம் அணியை வீழ்த்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே மொராக்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி தோல்வியை தழுவியதால், அந்நாட்டின் தலைநகரான பெலாரசில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான், கோஸ்டா ரிகா அணிகளும் மோதின. இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணியை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகா அணி வீழ்த்தியது.

இதேபோல் குரூப் எஃப் பிரிவில் இடம்பிடித்துள்ள கனடா, குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே குரோஷியா அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக 4-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் கனடாவை எளிதில் வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை குரோஷியா அணி தக்கவைத்துக் கொண்டது.

குரூப் இ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிபடுத்தியதால், கோல் அடிக்க முடியாமல் தவித்தனர். எனினும், ஆட்டத்தின் 62 வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோல் அடித்து முன்னிலை வகித்தது. அதன்பின் சுதாரித்த ஜெர்மனி, 83வது நிமிடத்தில் கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையை எட்டியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காதலியின் கிரிமினல் திட்டம்; காதலன் எடுத்த விபரீத முடிவு

EZHILARASAN D

டி20 உலகக் கோப்பை; வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்

G SaravanaKumar

டிச.25 முதல் ஜன. 2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை: அன்பில் மகேஸ்

G SaravanaKumar