“முதலமைச்சரின் தாய் குறித்து அவதூறாக பேச்சு: நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்!” – வன்னி அரசு

முதலமைச்சர் விஜயின் தாய் குறித்து அவதூறாக் பேசியதற்கு நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜயின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்நயினார் நாகேந்திரன் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?

காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.

பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது. நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.