சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் அடுத்த பாடல் வெளியீடு!

நடிகர் சூரி நடித்துள்ள மண்டாடி திரைப்படத்தின் அடுத்த பாடலான ‘உசுரே நீதான் புள்ள’ பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நாயகனாக வளம் வந்தவர் நடிகர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இது பெறும் வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் சூரி அடுத்தடுத்து மாமன், கருடன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சூரி, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாகை மாவட்ட மீனவர்கள் வாழ்க்கை,படகு போட்டி குறித்து உறுவாகியுள்ள இத்திரைப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாடலான ‘மண்டாடி மாண்டாடி’ பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் சூரியின் அசத்தல் நடனம் கவனம் ஈர்த்தாது.

இந்த நிலையில் மண்டாடி திரைப்படத்திம் அடுத்த பாட்டாலான ‘உசுரே நீதான் புள்ள’ பாடல் வெளியாகியுள்ளது. மெலடி பாடலான இது ரசிகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.