2021-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்சானிகளான டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த ஆய்வுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் நம்மை சுற்றி உள்ள உலகுக்கு நம் உடல் எப்படி பழகிக்கொள்கிறது என்பது பற்றிய ஆழமான புரிதல் ஏற்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அன்றாட வாழ்வில் இந்த உணர்வுகளை நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்றும் இந்த ஆய்வின் மூலம் முக்கிய கேள்விக்கு பதில் கிடைத்துள்ளதாக நோபல் பரிசு தேர்வு குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ’ஹெபடைட்டிஸ் சி’வைரஸை கண்டறிந்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டெர், சார்ல்ஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மிஷெல் ஹோட்டன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.