முக்கியச் செய்திகள் விளையாட்டு

CSK vs DC: முதலிடத்தை தக்க வைக்குமா சென்னை அணி?

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரிட்ச்சையில் ஈடுபட உள்ளன. 

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கியது. அப்போது சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் தலா 12 போட்டிகள் விளையாடியுள்ளன. அதில், இரு அணிகளும் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், புள்ளிகள் அடிப்படையில் சென்னை அணி +0.829 பெற்று முதலிடத்திலும், +0.551 புள்ளிகளுடன் டெல்லி அணி 2வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில், இரு அணிகள் இடையே இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் போட்டி நடைபெற உள்ளது.

இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டதால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள சென்னை அணியும், முதலிடத்துக்கு முன்னேற டெல்லி அணியும் இன்றைய போட்டியில் முனைப்பு காட்டுவார்கள். அதனால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
2008 முதல் 2020 வரை இரு அணிகளும் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 9 போட்டிகளிலும் மோதியுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுமா?

Ezhilarasan

அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

Ezhilarasan

ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்; டிசம்பர் 24 ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை!

Dhamotharan