இந்தியன் 2 படத்தின் தாத்தா வராரு பாடல் வீடியோ வைரல்!

‘தாத்தா வராரு ‘ என்ற பாடல் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி ‘இந்தியன் 2’ படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு…

‘தாத்தா வராரு ‘ என்ற பாடல் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி ‘இந்தியன் 2’ படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ‘இந்தியன் 2’ பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

இதையடுத்து, ‘தாத்தா வராரு ‘ என்ற பாடல் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கதறல்ஸ்’ பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.