காலணிக்குள் பாம்பு குட்டி இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நம் அன்றாட வாழ்க்கையில் நாம் நினைத்துக்கூடப் பார்க்காத இதுபோன்ற விஷயங்கள் பல சமயங்களில் வருகின்றன. ஒரு வைரல் வீடியோவில் ஒருவர் வழக்கம் போல் தனது காலணிகளை அணிய எடுத்தபோது, அதில் பாம்பு இருப்பதைக் கண்டார்.
அவரது காலணியில் ஒரு நாகப்பாம்பு இருப்பதைப் பார்த்ததும், இந்த சம்பவத்தை அந்த நபர் வீடியோவாக எடுத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நாகப்பாம்பு ஒரு குட்டியாக இருந்தாலும், நான் ஆபாத்தானவன் என்பதை செல்வது போல் படமெடுப்பதை காணமுடிகிறது.
பாம்பு காலணிக்குள் நுழையும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது, இதைப் பார்த்து மக்கள் கருத்துப் பிரிவில் கடுமையான எதிர்வினைகளை அளித்து வருகின்றனர். காலணிகள் மற்றும் செருப்புகளை சரிபார்க்காமல் அணிவது மிகவும் ஆபத்தானது என்று பலர் கூறியுள்ளனர், மேலும் பலர் தங்களுக்கு நடந்த இதுபோன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.







