திருப்பூர் அருகே குளத்தில் நிரம்பிய நீர் வழிந்து பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்திலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றதால் அறுவடைக்கு தயாராகியிருந்த பயிர்கள் சேதம் அடைந்தன. திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக…

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்திலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றதால் அறுவடைக்கு தயாராகியிருந்த பயிர்கள் சேதம் அடைந்தன.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஆண்டிபாளையம் குளம் நிரம்பி வருகிறது.  இந்நிலையில் குளத்திலிருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர் வெளியேறும் பகுதி தூர்வாரப்படாமல் இருப்பதால் குளம் நிரம்பி வெளியேறியது.

இதனால் தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்றதால் 5 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான கீரை வகைகள் பயிரிடப்பட்டிருந்ததால் அவை முழுவதும் தண்ணீரில் மூழ்கிச் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.