ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

காரைக்குடி அருகே ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள ஆவின் பால்பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.…

காரைக்குடி அருகே ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள ஆவின் பால்பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆவின் பால்பண்ணையில், அதன் விரிவாக்கம், மற்றும் செயல்பாடுகள் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, காரைக்குடி சுப்பிரமணியபுரம் மற்றும் கழனிவாசல் பகுதிகளில் உள்ள ஆவின் பால் விற்பனையகத்தில், பால் விற்பனை, ஆவின் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, காரைக்குடி சுப்பிரமணியபுரம் மற்றும் கழனிவாசல் பகுதிகளில் உள்ள ஆவின் பால் விற்பனையகத்தில், பால் விற்பனை, ஆவின் பொருட்களின் தரம் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.