புயலாக வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் | “மிதிலி” என பெயரிட்ட வானிலை ஆய்வு மையம்!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற இருப்பதாகவும், இற்கு மிதிலி என பெயரிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.         வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற இருப்பதாகவும், இற்கு மிதிலி என பெயரிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.        

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி இது புயலாக உருவானால் மாலத்தீவுகள் பரிந்துரைத்த “மிதிலி” என்ற பெயர் புயலுக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த புயலானது வருகிற  18 ஆம் தேதி வங்கதேசத்தின் மொங்கலோ- கோபுரா பகுதியில் ஆழ்ந்த காழ்ற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  இருந்த போதும் வளி மண்டல் சுழற்ச்சி காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.