31.9 C
Chennai
June 1, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வைகைப் புயலின் வீரியத்தை குறைத்த மாண்டஸ் புயல்

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், மாண்டஸ் புயலால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவரும் திரைப்படம் என்பதால், இதன்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ’மாண்டஸ் புயல்’ உருவாகியுள்ள காரணத்தால், இரண்டு நாட்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மழையின் காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை திரையில் காணும் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இருப்பினும் நகைச்சுவை மன்னன் வடிவேலுவின் படம் என்பதால், வரும் நாட்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading