இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி; பாஜகவுக்கு பெரும் பின்னடைவு -கே. எஸ். அழகிரி

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி என்பது பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி  பேசியுள்ளார். தஞ்சை மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு…

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி என்பது பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி  பேசியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கு தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை பகுதியில் தஞ்சை தந்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சோனியா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களுக்காகக் கட்சிப் பதவியே வேண்டாம் மக்கள் பணியே முக்கியம் என வாழ்ந்து கொண்டிருப்பவர் சோனியா காந்தி. அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என பேசினார்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இரண்டு மாநிலங்களில் பாஜக வசம் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் ஒரு மாநிலத்தைக் கைப்பற்றியுள்ளது. இதுவே பாஜகவிற்குப் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளதை உணர்த்தி வருகிறது என கூறினார்.

மேலும், ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகித்துள்ளது எதார்த்தமான ஒன்றாகும். இதனை மோடி தலைமையில் ஜி20 நடப்பது போல் சித்தரித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பது நீர் குமிழி போன்றது.  ஒருவகையில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவது போல் தோன்றுகிறது என்றார்.

அத்துடன், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ஒவ்வொரு தொகுதிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கொடி ஏற்றும் விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்து வருகிறது எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.