முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் பெனட்டிக் ஆன்டோவிடம் சைபர் கிரைம் தீவிர விசாரணை..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் பெனட்டிக் ஆன்டோவை நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு, பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்டோ. 29 வயதான இவர் குழித்துறை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மலங்கரை கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பில் பாதிரியாராக இருந்து வந்தார். அப்போது இவர் பல்வேறு பாலியல் புகாருக்கு உள்ளானர். இதன் உச்சகட்டமாக பேச்சிப்பாறையை சேர்ந்த நரசிங் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக் ஆண்டோவை கைது செய்ததோடு, 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பாதிரியார் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக 8 பெண்கள் உட்பட 38 பேர் கொண்ட வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த லேப்டாப்பில் 80க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. தீவிர விசாரணைக்கு பின்னர் பாதிரியார் பெனெட்டிக் ஆண்டோ நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை அடுத்து அவர் மீது மேலும் நகை பணம் மோசடி குறித்து ஆன்லைன் மூலம் பெண்கள் புகார் செய்ததை அடுத்து, அவரை நீதிமன்ற அனுமதி பெற்று, காலை சிறையில் இருந்து அழைத்து வந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாம் கட்ட விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

EZHILARASAN D

“இஸ்ரோவில் மீண்டும் வாழ்ந்தது போல் இருந்தது”- மயில்சாமி அண்ணாத்துரை நெகிழ்ச்சி

Web Editor

மோடி மீண்டும் பிரதமராக வந்தால்தான் நாடு முன்னேறும்: குஷ்பு

EZHILARASAN D