எழுவர் விடுதலை குறித்து, உரிய சட்ட ஆலோசனைக்கு பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க, குடியரசுத் தலைவருக்குத் தான் அதிகாரம் இருக்கிறது, என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்திருந்தார். ஆளுநரின் கருத்து உச்ச நீதிமன்றத்தில தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பசுமை வழி சாலையில் உள்ள, தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஆளுநரின் கருத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளுநர் என்ன கருத்தைப் பதிவு செய்துள்ளார் என்பதை பார்த்து, ஆலோசனை செய்யப்பட்ட பிறகே, தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இதே விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் திமுகவை போல தாங்கள் இரட்டை வேடம் போடவில்லை என்று கூறினார். ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு குடியரசு தலைவர் உரிய முடிவை எடுப்பார் என்று தாம்நம்புவதாக கூறி உள்ளார்.