வெட்டுப்பட்ட இளைஞர்; கொலைவெறி கும்பல் கைது

சென்னையில் இளைஞரை வெட்டிய வழக்கில் இளம் சிறார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையை அடுத்த நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு ப்ரியன்(21). இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர் 3வது தெருவில் உள்ள பிளைவுட் கடையில்…

சென்னையில் இளைஞரை வெட்டிய வழக்கில் இளம் சிறார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு ப்ரியன்(21). இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர் 3வது தெருவில் உள்ள பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று விஷ்ணுவை சரமாரியாக வெட்டி தப்பியோடியது. பலத்த காயங்களுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் விஷ்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின் பேரில் சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சோலை ராஜா(19), சந்தோஷ்குமார்(20), நவீன்குமார்(18), சக்திவேல்(19), ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மணிமாறன்(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஏரியாவில் யார் செல்வாக்கு மிக்கவர் என்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது தெரியவந்தது. அது தொடர்பாக தான் விஷ்ணுவை கொலை முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பிடிப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மற்றொரு இளம் சிறாரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.