தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 17 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். நாளை முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த்தி கொண்டு, 9 மாதங்கள் நிறைவடைந்த 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையில் புறநகர் ரயில்களில் பயணிக்க தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறித்து வரவேற்பு தெரிவித்த அவர், டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனக்கூறினார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஊரடங்கின் போது, டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்ததை தான், திமுக எதிர்த்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடும் வணிக அங்காடிகள் குறித்து புகார் வருமானால், அந்த கடைகள் மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.