முழு ஊரடங்கு: கண்காணிப்பு பணியில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக…

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னையில், 372 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் நேற்றிரவு முதல் நடைபெற்று வருகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே சுற்றுவோரை பிடித்து, போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

இதேபோல், தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட இடங்களில் 1,200 போலீசாரும், ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட இடங்களில் 1,750 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

முழு ஊரடங்கின்போது திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும், அந்த நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களை காண்பித்துவிட்டு பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.