சுந்தர். சி, நடித்துள்ள ‘ஒன் 2 ஒன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
தலைநகரம் 2 படத்துக்குப் பிறகு சுந்தர். சி நடிக்கும் புதிய படத்தை கே.திருஞானம் எழுதி இயக்குகிறார். ஒரு குழந்தைக்கு பாசமான தந்தையாகவும், மறுபுறம் அதிரடியாகவும் சுந்தர் சி நடித்துள்ளார்.
இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி, மானஸ்வி, ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ரீ ரிக்கார்டிங் முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



