வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: எருமை மாடுகளுடன் ஊர்வலம் சென்ற விவசாயிகள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டிசம்பர் தொடக்கத்தில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம்…

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டிசம்பர் தொடக்கத்தில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற 11 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதனால் குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். இதற்கு ஆதரவாக தமிழகத்திலும் டிராக்டர் பேரணிகள் நடந்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எருமை மாடுகளுடன் ஊர்வலம் நடந்தது. விவசாய சங்க பிரதிநிதி இளங்கீரன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்போக்குடன் நடந்துவருவதாகக் குற்றம்சாட்டிய விவசாயிகள், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தினர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கடலூரில் டிராக்டர் பேரணி நடத்தவே விவசாயிகள் முடிவு செய்திருந்ததாகக் குறிப்பிட்ட இளங்கீரன், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததோடு, பேரணியில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர் என்று தெரிவித்தார். அதனால், டிராக்டருக்கு பதிலாக தாங்கள் எருமை மாடுகளுடன் ஊர்வலம் சென்றதாகவும் விவரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply