சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 62வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 61 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் எந்த நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என தீவிரமாக சென்றுகொண்டிருக்கிறது போட்டி.
இந்நிலையில் இன்று 61வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனால் இப்போட்டியை காண சென்னை ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.
ராஜஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனையடுத்து 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகின்றன. இதில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றால் பாய்ண்ட் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.







