சூடுபிடிக்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தல்; இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

ஏப்ரல் 13 நாளை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள நிலையில் 23 வேட்பாளர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.  கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல்…

ஏப்ரல் 13 நாளை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள நிலையில் 23 வேட்பாளர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ந் தேதி தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 2 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

எனினும் ஆளும் பாஜகவில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நிலை நீடித்தன.  வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பாஜகவின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் டெல்லியில் இரண்டு நாட்களாக  நடைபெற்றது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பாஜக வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 13 நாளை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள நிலையில் 23 வேட்பாளர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.   இதில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தலைவர் நாகராஜா சாபி கல்கத்கி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அத்துடன், “கோலார் தங்கவயல்” (கேஜிஎஃப்) பாஜக வேட்பாளராக எஸ்சி வேட்பாளர் அஷ்வினி சம்பங்கி களமிறங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.