சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. கள்ள சந்தையில் விற்பனை செய்த 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16வது சீசன் ஐபில் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் மே 10ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிக்கு இன்று காலை 7:00 மணி முதலே டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. அதேபோல் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட்களை வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வதை தடுப்பதற்காக இந்த முறையை அதிக அளவிலான காவல்துறை கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







