கிரிப்டோ கோப்பை – இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா
கிரிப்டோ கோப்பை – மெல்ட் வாட்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரேபிட் செஸ் தொடரில் 7வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன் மோதினர். உலகின் பிரபல செஸ் வீரர்களான 8 பேர் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் 6 சுற்றுகள் அடிப்படையில் கார்ல்சன் முதலிடத்தில் தொடர்ந்து வந்தார். பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தில் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் 7 வது சுற்று ஆட்டத்தில் 2-2 என போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 7 வது சுற்று ஆட்டத்தில் 2-2 என போட்டி டிரா ஆனது.
பிரக்ஞானந்தா – கார்ல்சன் இடையேயான கடைசி போட்டி டை பிரேக்கரில் முடிந்த நிலையில், டை பிரேக்கர் மூலம் பிரக்ஞானந்தாவெற்றிபெற்றார். எனவே 7 சுற்றுகள் முடிவின் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் புள்ளிகள் பெற்று மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்து இரண்டாவது முறையாக கிரிட்டோ கோப்பையை வென்றார். பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார்.
போட்டி முடிந்த பிறகு பிரக்ஞானந்தாவிடம், 7 ஆம் சுற்றுக்கு முன்பு அவரது அக்கா வைஷாலி என்ன சொன்னார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ” எனது அக்கா குறுஞ்செய்தியில், Don’t worry, Just Beat MAGNUS என சிம்பலாக அனுப்பியிருந்தாக என தெரிவித்தார் . பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி ஆகிய இருவரும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.







