சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை நாளான இன்று அதிக அளவில் மக்கள் குவிந்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் வார இறுதி நாட்களில் எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும், இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், இன்று மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது. மேலும், இன்று அதிக அளவிலான வாகனங்கள் மெரினா கடற்கரைக்கு வருவதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடற்கரை மணல் பரப்பு முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காட்சி அளிக்கிறது. குடும்பத்துடன் மக்கள் கடற்கரையில் அமைர்ந்து, பேசி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடல் அலைகள் வேகமாக அடிப்பதால், கடலில் யாரும் குளிக்க வேண்டாம் என குதிரையில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் பொதுமக்களுக்கு தொடர் அறிவுறுத்தல் செய்து வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ‘கல்குவாரி விபத்தில் சிக்கிய 3வது நபர் மீட்பு’
கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. அதனால், பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இன்று வழக்கம் போல, கோடை வெயில் சுட்டெரித்தது. அதன் காரணமாக மாலை வரை வீட்டிலேயே இருந்த மக்கள் மாலையில் குடும்பம் குடும்பமாக மெரினாவில் குவிந்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.