சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல், கீழ்வேளூர் உட்பட 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த 6 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் பட்டியலை இன்று கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்த மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக என நான்கு கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கே.பாலகிருஷ்ணன் குறிப்பிடுகையில், தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டிருந்தாலும், எதிர்க் கட்சியினரை தோற்கடிப்பதை முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.







