சிவகங்கை அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சிவகங்கை அருகே பாகனேரியில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரரான குயவன்குளத்தை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் பங்கேற்றார்.
அப்போது காளை முட்டி தூக்கி வீசியதில் படுகாயமடைந்த சக்திவேல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதகுபட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








