நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் யூடியூப்பில் 17 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படம் துணிவு. மஞ்சு வாரியர், சமுத்திரகனி, பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தைக் காண அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துணிவு படத்தின் பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக படக்குழு வெளியிட்டது. சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என வரிசையாக துணிவு படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இவை இடம்பெற்றன. இதையடுத்து துணிவு பட கதாப்பாத்திரங்களையும் சமூக வலைதளத்தில் படக்குழு அறிவித்து வந்தது.
இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.தற்போது இந்த ட்ரெய்லர் யூ டியூப்பில் 17 மில்லியன் பார்வைகளை கடந்து அதிகம் வைரலாகி வருகிறது.