கள்ளக்குறிச்சி வன்முறை; 125 பேர் சிறையில் அடைப்பு

கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறையில் இதுவரை 379 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது…

கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறையில் இதுவரை 379 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.

இதில் போராட்டக்காரர்கள் பள்ளியின் பேருந்தை டிராக்டரால், சேதப்படுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். இதுமட்டும் இல்லாமல் இந்த வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பள்ளி வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் போராட்டக்காராக்கள் அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்கினர்.

இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணி தீவிரமடைந்து வருகிறது. பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் நான்கு டிஎஸ்பிகள் மேற்பார்வையில் 10 ஆய்வாளர்கள் கொண்ட பத்து தனி படைகள் அமைப்பு தனிப்படை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தொடர்ந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பத்து தனி படைகள் மூலமாக கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சின்ன சேலம் நயினார் பாளையம் ஆகிய பகுதிகளில் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில் 379 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட மாக கலவரத்தில் ஈடுபட்ட 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.