லியோ திரைப்படத்திற்கான கவுண்டவுன் கேரளாவில் ஆரம்பமாகி உள்ள நிலையில்,
வெளிநாடுகளிலும் லியோ பட விளம்பரங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது.
விஜய் நடித்த லியோ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கேரள மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் லியோ
படத்திற்கான பல்வேறு ப்ரொமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் டிஜே பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளாவை கடந்து உலகம் முழுவதும் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து உள்ள நிலையில் லண்டனிலும், பல்வேறு இடங்களில் பேனர்கள், ஒளிரும் கட்டவுட்டுகள் மற்றும் கார் முழுவதும் லியோ படத்திற்கான போஸ்டர்களை ஒட்டி ரசிகர்கள் வலம் வந்து கொண்டுள்ளனர்.
பல்வேறு ரசிகர்கள் லியோ படத்தை எதிர்நோக்கி உள்ள நிலையில் ஆங்கில படங்களுக்கு இணையாக லியோ வசூல் சாதனை செய்யும் என விஜய் ரசிகர்கள்
எதிர்பார்ப்புடன் உள்ளனர்.







