பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பொறியியல் கலந்தாய்வு முன்கூட்டியே தொடங்குவதாக கூறினார். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கும் எனவும், செப்டம்பர் 3ஆம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 3 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவித்த அமைச்சர், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறினார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நுழைவுக்கட்டணமாக ரூ 200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் அதிகமாக வந்தால் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர நாளை முதலே விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.