கொரோனா அச்சம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் உயிரிழப்பு முயற்சி, இருவர் உயிரிழப்பு

கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த கணவரை…

கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த லட்சுமி, 13 வயதான மகன் சிபிராஜ், 23 வயதான மகள் ஜோதிகா, ஜோதிகாவின் 3 வயது குழந்தை ரித்தீஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், மகள் ஜோதிகாவுக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று, குடும்பத்தினர் அனைவருக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில், லட்சுமி உள்ளிட்ட 4 பேரும் விஷம் குடித்து  உயிரிழப்புக்கு முயன்றுள்ளனர். இதில், 3 வயது குழந்தை ரித்தீஷூம், ஜோதிகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லட்சுமியும், சிபிராஜூம் மீட்கப்பட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, உயிரிழந்த ஜோதிகா, குழந்தை ஆகியோரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.