பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி: பள்ளிக் கல்வித்துறை

ஜனவரி 03-ஆம் தேதி முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்பாக,…

ஜனவரி 03-ஆம் தேதி முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்பாக, பள்ளித் தலைமையாசிரியகளை, முதல்வர்களை தொலைபேசி வாயிலாகவோ, நேரிலோ மருத்துவர்கள் தொடர்பு கொள்ளும் போது போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் 15 முதல் 18 வயது உடைய அனைத்து மாணவ, மாணவிகளையும், குறிப்பிட்ட தேதியில் பள்ளிக்கு தவறாது வருவதற்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ள தகவல் தொடர்புடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கு முன்கூட்டியே தவறாது தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் நாளில் பள்ளி அமைந்துள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் தகவல் தந்திருக்க வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தப்படும் நாளில், இணைய வசதியுடன் கூடிய கணினி அல்லது மடிக்கணினி இயக்கத் தெரிந்த ஆசிரியரால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது. மேலும், இப்பணிகளை மேற்கொள்ளும் போது அரசால் வழங்கப்பட்டுள்ள, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை, தவறாது கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.