நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறது.
மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,26,03,188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 32,988 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 3,18,21,428 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 496 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 4,36,861 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 79,48,439 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 61,22,08,542 ஆக உயர்ந்துள்ளது.