முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,512 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 26 லட்சத்து 14 ஆயிரத்து 872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 725 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25
லட்சத்து 63 ஆயிரத்து 101 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 189 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 218 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்

Advertisement:
SHARE

Related posts

நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

Jeba Arul Robinson

வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!

Halley karthi

நகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் புகார்!

Niruban Chakkaaravarthi