இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20,035 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அளவில் நேற்று ஒரே நாளில் 20,035 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று ஒரே நாளில் 23,181 நபர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும், இதுவரை 98,83,461 குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்து நேற்று மட்டும் 256 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் இதுவரை 1,48,994 நபர்கள் உயிரிழந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 20,035 பேர் பாதிப்பு
256 பேர் பலி
23,181 பேர் குணமடைந்தனர்
மொத்தம் 1,48,994 பேர் பலி
98,83,461 பேர் குணமடைந்தனர்
2,54,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்