மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரிப்பு!

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு, இரண்டாயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, 2019…

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு, இரண்டாயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, 2019 ஆம் ஆண்டு ஜனவரியில், பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தகவல்களை தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா கோரினார்.

அதன்படி வரும் மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பீட்டு தொகையான இரண்டாயிரம் கோடி ரூபாயில் 85 சதவீதத்தை ஜிக்கா வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையோடு சேர்ந்து அமையும் மருத்துவக் கல்லூரி பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர்தான் மாணவர் சேர்க்க நடைபெறும் என்றும், முன்கூட்டியே தொடங்குவதற்காக தற்காலிக கட்டடங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான 222 புள்ளி 47 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கி உள்ளதாகவும் ஆர்.டி.ஐ தகவலில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply